Posts

இந்த காளியோட ஆட்டத்தை இப்போ தான பாக்க போற

Image
கொஞ்ச நாளாவே நம்ம சங்கிகள் மத்தியில ஒரு பதற்றம் தெரியுது. அவுங்களோட முகநூலாகட்டும் இல்ல, வாட்ஸப் குழுக்கள் ஆகட்டும், ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழிக மாதிரி தான் இருக்காங்க.  திமுக ஆட்சியை குறை சொல்லணும் ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல .. இந்த ஸ்டாலின் வேற போடற பால் எல்லாம் சிக்ஸர்ரா அடிச்சு தள்றார். இத்தனை நாள் மோடியின் ஆளுமை , குஜராத் மாடல், பாக்கிஸ்தான் நடுங்குது, சீனாக்காரன் பயந்து பம்முறான். இப்படி ஆகா ஓகோன்னு பீத்திட்டு இருந்ததை கொரோனா வந்து சல்லி சல்லிய நொறுக்கிடுச்சு. நடுநிலையா பேசறேன்னு மோடியை ஆதரிச்சவங்க கூட  இப்போ இந்த முட்டா பயலுக்கு தான் இத்தனை நாள் முட்டு கொடுத்தாமனு வெளிப்படையாவே  சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்திய முழுசும் காவி பூசலாமுன்னு நெனச்ச நேரத்துல... நடந்த மேற்கு வாங்க  தேர்தல்ல  மம்தா அடிச்ச அடில இப்போ மகாராஷ்டிரா, குஜராத், உதிர்ப்பிரதேசத்துல உள்ள எதிர் கட்சிக்கெல்லாம் சங்கிகளுக்கு எதிரா பயங்கரமா வேலை செய்ய தொடங்கிட்டாங்க ..  இப்பவே நாக்பூர் டவுசர் பாய்ஸ்   மோடியை கழட்டி விடற மனநிலைக்கு வந்துட்டாங்க.   மோடிக்கு...

இதுக்கு பேரு தான் பெருமைக்கு பன்னி மேக்கறது

Image
  செய்தி 1 : இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. செய்தி 2: இந்தியா கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியது. செய்தி 3: இந்தியா ருசியாவிலிருந்து கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது.   செய்தி 4 : இந்தியா 80 நாடுகளுக்கு மேல் கோவிட் தடுப்பூசிகளை கொடுத்துள்ளது.. அது மேலும்  தொடரும். - சக்தி😎

மாரி செல்வராஜ் எனும் நீலச்சங்கி

Image
மாரி செல்வராஜ்  ... மிகச்சிறந்த கலைஞன் .. ஆகசிறந்த இயக்குனராக வருவார் என்ற எதிர் பார்ப்பை தன் முதல் படமான பறி ஏறும் பெருமாள் படத்தில் மூலம் எடுத்தவர் ...  இரண்டாவது படம் பெரிய பேனர், தேசிய விருது பெற்ற நடிகர், மீண்டும் அதே கதை களம், குரலற்றவர்களின் பார்வையில் அவர்களுடைய வலியையும், வரலாற்றையும் சொல்லும் படமாக வந்துள்ள கர்ணனில் ஏன் இந்த பிழை?  95களில் நடைபெற்ற சம்பவத்தை 97 இல் நடப்பது போல சித்தரித்தது வெறும் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள முடியாது.. படம் நெடுக குறியீடுகளை வைக்க தெரிந்த இயக்குனர் அவ்வளவு முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை .. திமுக ஆட்சியில் நடந்ததை முதல் படத்தில் தைரியமாக  சொல்ல தெரிந்த ஒருவருக்கு அதிமுக ஆட்சியில் நடந்தைவற்ற கதையாக எடுக்கும் போது மட்டும் ஏன் மாற்றி போட வேண்டும்? அம்மையார் இருந்திருந்தால் கூட பயத்தில் மாற்றி விட்டார் என சொல்ல முடியும் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை.. எதிப்புகள் வந்த பின்னே '90 களின் பிற்பகுதி' என மாற்றி போட்டிருக்கிறார் .. முன்னதிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என தெரியவில்லை ...  இதற்கு பருத்தி மூட்டை அங்கையே இருந்த...